ராஜஸ்தான் மருத்துவமனை பயங்கர தீ விபத்து: 6 நோயாளிகள் பலி!
Rajasthan hospital fire accident patients
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்களும், 4 பேர் ஆண்களும் அடங்குவர்.
இந்த விபத்தில் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் 5 நோயாளிகள் தீவிர காயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாநில முதல்வர் பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார். மேலும், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் அரசு உறுதியளித்துள்ளது.
English Summary
Rajasthan hospital fire accident patients