ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்படும்... பகிரங்க மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!
gaza Israel Hamas Donald Trump
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று, கைதிகளில் சிலரை விடுவிக்க ஒப்புக்கொண்டதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனை ஏற்று, தாக்குதல்கள் நிறுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
ஆனால், நேற்று காசாவில் நடந்த தாக்குதல்களில் உதவிப் பொருட்களுக்கு காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும், பட்டினியால் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலைமையைப் பற்றி விளக்கமளித்த இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும் முழுமையான போர் நிறுத்தம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்று கூறினார்.
இதனிடையே, காசா மீது கட்டுப்பாட்டை கைவிட ஹமாஸ் மறுத்தால், அந்த அமைப்பு முற்றிலும் அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, இஸ்ரேலிய குழு ஒன்று ஹமாஸுடன் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் திங்கட்கிழமை சந்திக்கத் தயாராக இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
gaza Israel Hamas Donald Trump