அப்படி போடு! “இனி ஒரு உயிர் கூட பலியாகாது”! -பொதுக்கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் அரசு...!
Put it that way Not single life lost Government imposes strict restrictions public gatherings
கரூர் பொதுக்கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்வூட்டும் சம்பவத்தையடுத்து, தமிழக அரசு இனி இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாதவாறு அரசியல் கூட்டங்கள் மற்றும் பெரிய பொதுக்கூட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மூத்த அதிகாரிகள் தெரிவிக்கையில்,"இனி ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது” என்ற நோக்கில் அரசு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்கி வருகிறது.

அவ்வகையில்,
எந்தக் கட்சியும் பெரிய கூட்டம் நடத்த காவல்துறையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும்.
கூட்டம் நடைபெறும் இடம், கூட்ட நேரம், மக்கள் எண்ணிக்கை போன்ற விவரங்கள் முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும்.
மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு குழு சான்று வழங்கிய பிறகே கூட்டத்திற்கு அனுமதி.
சாலைகளில் கூட்டம் நடத்த தடை, திறந்த இடங்களில் மட்டுமே அனுமதி.
கூட்ட இடங்களில் அவசர வெளியேறும் வாயில்கள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழு கட்டாயம் இருக்க வேண்டும்.
சி.சி.டி.வி. மற்றும் ட்ரோன் கண்காணிப்பு மூலம் முழு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கூட்டத்தில் பங்கேற்கத் தடை.
கூட்டம் முடிந்ததும் சுத்தம் மற்றும் கழிவு அகற்றம் கட்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு.
இந்த புதிய வழிகாட்டுதல்களை விரைவில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருத்துகளுடன் இறுதி செய்து அடுத்த தேர்தலுக்கு முன் நடைமுறையில் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
English Summary
Put it that way Not single life lost Government imposes strict restrictions public gatherings