5 ஆண்டுகளில் 51 மலக்குழி மரணங்கள்! திமுக அரசு கடந்துசெல்வது வெட்கக்கேடானது - நா.த,க கண்டனம்!
NTK Condemn to DMk MK Stalin govt
நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி விடுத்துள்ள கண்டன செய்தியில், "சமூக நீதி ஆட்சியென சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுகவின் ஆட்சியில்தான் இந்தக் கொடுமையும் நடந்திருக்கிறது.
மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்கு எதிராக சட்டமியற்றப்பட்டும் மனிதர்களே அதுபோன்ற பணிகளில் இன்றளவும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
விளைவு, 2018 - 23 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 51 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த மரணங்கள் பொதுச்சமூகத்தின் கருணைக்குக்கூட அப்பாற்பட்டவையாக கடந்து போகப் படுகின்றன.
மலக்குழி மரணங்களில் இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்குமான தலைகுனிவு இல்லையா?
மலக்குழிவு மரணங்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு 30 இலட்சம் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கே 10 இலட்சம் நிவாரணம் அளிக்கும் திமுக அரசு, மலக்குழி மரணங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்காது கடந்துசெல்வது வெட்கக்கேடானது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
NTK Condemn to DMk MK Stalin govt