கரூர் துயரத்துக்குப் பின் விஜயின் தீர்மானம்!- ஆறுதல் பணி விரைவில் தொடக்கம்...!
Vijays decision after Karur tragedy Relief work begin soon
த.வெ.க. தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசல் 41 உயிரிழப்புகளும் பல காயங்களும் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியது.இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. கரூர் மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். மேலும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், சமூக வலைத்தள பதிவை ஒட்டி ஆதவ் அர்ஜூனாவும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டார். இவர்களில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது, இது த.வெ.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த விபத்து நடந்தது ஒரு வாரம் கடந்தும், கரூரில் சோகமும் அச்சமும் இன்னும் நீங்கவில்லை.

இதில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நேரில் சென்று உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி,அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது, அதோடு த.வெ.க. சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அண்மையில், விஜய் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டதாவது,"கரூருக்கு வந்து மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவேன்,”என்று உறுதி அளித்திருந்தார். இதனால், “அவர் எப்போது வருவார்?” என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் மக்களிடையே எழுந்தது. கூடவே, உயர்நீதிமன்றமும் விஜயை நோக்கி, “பாதிக்கப்பட்ட மக்களை ஏன் இன்னும் சந்திக்கவில்லை?” என்று கேட்டிருந்தது.
இதற்கிடையில், விஜய் கரூரைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட த.வெ.க. மாவட்டச் செயலாளர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.அந்த உரையாடலில், அவர் தெரிவித்ததாக அறியப்படுகிறது.மேலும், “பிரச்சனைகள் விரைவில் சரியாகிவிடும்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக உதவுங்கள். விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம். நாம்தான் மக்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.”இத்தகவல் த.வெ.க. வட்டாரத்தில் விஜயின் உணர்ச்சி பூர்வமான தலைமைச்சித்திரத்தை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
English Summary
Vijays decision after Karur tragedy Relief work begin soon