செருப்பு வீச்சு சர்ச்சை! ஆம்புலன்ஸ் டிரைவர் மீது பொய்யான குற்றச்சாட்டு...!
Shoe throwing controversy False accusation against ambulance driver
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியை சேர்ந்த தரனீஷ் (35) என்பவர், தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி வருபவர். கடந்த மாதம் 27-ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிரசார கூட்டத்தில் எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பிரசார வாகனத்தில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்த விஜய் மீது, மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில், “விஜய் மீது செருப்பு வீசியது தரனீஷ் தான்!” என்று பொய்யான குற்றச்சாட்டு பரவி, அவரது பெயரை பயன்படுத்தி அவதூறு மற்றும் தகாத வார்த்தைகள் கூறிய வீடியோக்கள் வைரலாகி பரவி வந்தன.இந்நிலையில் தரனீஷ் விளக்கம் அளித்ததாவது,"விஜய் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நான் அங்கு சென்றேன்.
ஆனால் எனது பெயரை பொய்யாக இழுத்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினர்” என்று தெரிவித்தார்.இதையடுத்து, தரனீஷ் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபரை கண்டறிந்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றார்.
English Summary
Shoe throwing controversy False accusation against ambulance driver