அதிகாலை அதிர்ச்சி! 5 கி.மீ ஆழத்தில் அதிர்வு...! தோடா பகுதியில் நிலநடுக்கம், மக்கள் பீதி...!
Early morning shock Tremor depth 5 km Earthquake Doda area people panic
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலம் நடுங்கிய பரபரப்பு ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 2.47 மணியளவில், 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

மேலும், புவியின் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், 33.10° வடக்கு அட்சரேகை மற்றும் 76.18° கிழக்கு தீர்க்கரேகை பகுதிகளில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிர்ச்சேதம் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
எனினும், அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் சிறிது நேரம் அச்சத்துடன் வீடுகளிலிருந்து வெளியில் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Early morning shock Tremor depth 5 km Earthquake Doda area people panic