புதிய விடியோ வெளியானது! பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை தரைமட்டமாக்கிய இந்திய இராணுவம்!
Operation Sindoor India Pakistan Conflict new video
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலளிக்க, இந்தியா பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, மூன்று படைகளும் ஒருங்கிணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.
இதனையடுத்து, இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் நிலைமை தீவிரமாகியுள்ளது. பாகிஸ்தான், இந்திய எல்லைக்கு அருகிலுள்ள 26 பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்ட நிலையில், இந்தியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
குறிப்பாக மே 8 மற்றும் 9 தேதிகளில் இரவு நேரங்களில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டதற்கு, இந்திய பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புடன் துல்லியத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விடியோக்களில், பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்கள் ஏவுகணைத் தாக்குதல்களால் முற்றிலும் அழிக்கப்பட்டதைக் காணலாம்.
இந்திய எல்லைக்கு அண்மையில் அமைந்த முகாம்கள் தொடக்கமாக அழிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஏவுதளங்கள் மற்றும் அக்னூரில் இயங்கி வந்த பயங்கரவாத தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், இதனை உறுதிப்படுத்தும் வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய ராணுவம் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
English Summary
Operation Sindoor India Pakistan Conflict new video