ஊட்டியில் தொடங்கிய ரோஜா கண்காட்சி: ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை!
Rose exhibition started in Ooty A large number of tourists visited
ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது.கண்காட்சியை அரசு கொறடா ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.வெளிநாடுகள் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்வந்து உதகை அழகை ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் 20-வது ரோஜா கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. 20-வது ரோஜா கண்காட்சியை அரசு கொறடா ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். 4 ஆயிரம் வகைகளில், 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல வண்ண ரோஜா செடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.இதனை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமல்லாமல் கோடை விடுமுறை நடைபெற்றுவருவதால் இந்தமுறை ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என கூறுகின்றனர்.
மேலும் ரோஜா கண்காட்சியில் இம்முறை, டால்பின், முத்து, சிப்பி, நத்தை, மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன் போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள், வண்ண, வண்ண ரோஜா மலர்கள் கொண்டு அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரோஜா கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
English Summary
Rose exhibition started in Ooty A large number of tourists visited