ராஜஸ்தானின் ஒரு மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை! பொது இடங்களில் கூடத் தடை!
Operation Sindoor India Pakistan Conflict Rajasthan red alert
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா–பாகிஸ்தான் எல்லையில் நிலவும் போர் சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம் உயர் சிவப்பு எச்சரிக்கை நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து விமானம், ட்ரோன், ஏவுகணைகள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்து வரும் சூழலில், எல்லை அருகேயுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, இரவு நேரங்களில் வெளிச்சம் பரவாமல் இருக்க மின் விளக்குகள் அணைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பார்மர் பகுதியில் அடையாளம் தெரியாத ஏவுகணை பாகங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும், தேவையின்றி சாலைகளில் சுற்றிவரவோ, பொது இடங்களில் கூடுவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை உத்தரவை வெளியிட்டுள்ளார்.
English Summary
Operation Sindoor India Pakistan Conflict Rajasthan red alert