பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் தொடர் அடித்துமீறல்! விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட்!
Operation Sindoor India Pakistan Conflict
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலால் பாகிஸ்தான் நிலைதடுமாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை கடந்து தாக்குதலில் ஈடுபடுகிறது. இந்தியா அதற்கேற்ப கடுமையான பதிலடி வழங்கி வருகிறது.
காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லைப் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் முற்றிலுமாக தடுத்தன. அதே நேரத்தில் பாரமுல்லா, ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட 26 இடங்களில் பாகிஸ்தான் இயக்கிய டிரோன்கள், இந்திய ராணுவத்தால் வானிலேயே வீழ்த்தப்பட்டன.
பாகிஸ்தான் தொடர்ச்சியாக குடியிருப்புப் பகுதிகளை குறிவைத்து ஷெல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு நடைபெற்ற தாக்குதலில் ரஜோரி, பூஞ்ச் பகுதிகளில் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் அத்துமீறலை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், பதிண்டா, ஜலந்தர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும், பொது இடங்களில் கூடுதல் தடையாக இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Operation Sindoor India Pakistan Conflict