பேரணிக்காக போக்குவரத்து மாற்றங்கள்...!- சென்னை காமராசர் சாலையில்...
Traffic changes for the rally On Kamaraj Road Chennai
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக சென்னை காமராஜர் சாலையில் இன்று நடைபெறவுள்ள பேரணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போக்குவரத்து மாற்றங்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"
- திருவான்மியூரிலிருந்து காமராஜர் சாலை வழியாக பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி கொள்ளலாம். பாரிமுனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அண்ணாசாலை, தேனாம்பேட்டை காந்தி மண்டபம் வழியாக சென்று இலக்கை அடையலாம்.
- அண்ணா சிலையிலிருந்து வரும் மாநகரப் பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு - ஜிபி சாலை - டவர் கிளாக் - ஜிஆர்எச் பாயிண்ட் -ராயப்பேட்டை நெடுஞ்சாலை - லாயிட்ஸ் சாலை - ஜம்புலிங்கம் தெரு - ஆர்.கே.சாலை - வி.எம்.தெரு, மந்தைவெளி - மயிலாப்பூர் வழியாக சென்று மத்திய கைலாஷை அடையலாம்.
- கிரீன்வேஸ் பாயின்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி ஆர்.ஏ. புரம் 2-வது பிரதான சாலை, டிடிகே சாலை, அண்ணாசாலை வழியாக சென்று இலக்கை அடையலாம். மேலும், வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் மதியம் 12 முதல் இரவு 9 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது " என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Traffic changes for the rally On Kamaraj Road Chennai