தீவிர தாக்குதலில் இறங்கிய பாகிஸ்தான்! தவிடு பொடியாக்கும் இந்தியா!
India Pakistan Conflict Operation Sindoor
இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் வலுத்துவரும் சூழலில், பாகிஸ்தானின் தாக்குதல்கள் தொடர்ந்தாலும் அவற்றை முற்றிலும் முறியடிக்கக் காத்திருப்பதாக இந்திய ராணுவம் உறுதி தெரிவித்துள்ளது.
மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இரவு நேரங்களில் இருநாடுகளும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தின. பாகிஸ்தான் சார்பாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் தாக்குதல்களை இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு துல்லியமாகத் தகர்த்தெறிந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் சார்பாக ட்ரோன்கள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை 5 மணிக்கு அமிர்தசரஸில் உள்ள காசா கான்ட் பகுதியில் ஆயுதமேந்திய ட்ரோன்கள் தாக்க முயற்சித்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு படையினர் அவற்றை மிக விரைவில் சுட்டு வீழ்த்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் எல்லை பாதுகாப்பையும் பொதுமக்கள் பாதுகாப்பையும் மீறி நடக்கும் பாகிஸ்தானின் திட்டங்களை இந்திய ராணுவம் கடுமையாக எதிர்கொள்ளும் என்றும், எதிரிகளின் சூழ்ச்சிகளை துணிவுடன் தடுத்து நிறுத்துவோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள் முறியடிக்கப்பட்ட புகைப்படங்களும் விடியோக்களும் இணைக்கப்பட்டுள்ளன.
English Summary
India Pakistan Conflict Operation Sindoor