திருப்பூரில் பரபரப்பு - 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது.!
youth arrested for harassment in tirupur
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் அரசன். இவருக்கு 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு பேசி வந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரசன் அந்த சிறுமியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

இதில், அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for harassment in tirupur