சூறாவளி மழை...! தரையில் சாய்ந்த வாழை மரங்கள்... கவலையில் விவசாயி...!
Torrential rain Banana trees leaning to the ground Farmer in distress
திண்டுக்கலில் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயதான ராஜேந்திரன் என்பவர். இவர் தற்போது வாழை, தென்னை மரங்களை சாகுபடி செய்து இருந்தார்.

இந்தப் பகுதியில் கடந்த 2 தினங்களாக பெய்த சூறாவளி காற்றால், சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து தரையில் விழுந்தன.அதுமட்டுமின்றி ஆண்டிபட்டி, மிளகாய்பட்டி, முசுவனூத்து உள்ளிட்ட கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டன.
இந்தக் கடும் சூழலில், மின்சார வாரியத்துறையின் நடவடிக்கையால் மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருவதுடன், எதிர்பாராமல் மீண்டும் திடீரென இப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் இருந்த சுமார் 2000 வாழை மரங்களின் நடுப்பகுதி முறிந்து தரையில் சாய்ந்தது.
விவசாயி ராஜேந்திரன்:
இதைப் பார்த்த விவசாயி ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.மேலும் இதுகுறித்து விவசாயிகள் குறிப்பிடுகையில்,'' திண்டுக்கலில் அக்னி நட்சத்திர சீசனில் மழை பெய்வது ஆறுதலாக இருந்த போதிலும், சூறாவளி காற்றுடன் பெய்த மழை பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்டத்தில் வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை, சத்திரப்பட்டி,பழனி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. எனவே வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களில் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Torrential rain Banana trees leaning to the ground Farmer in distress