கவலை வேண்டாம் மக்களே...! வாரம் ஒரு முறை இலவச மருத்துவ முகாம் வந்துவிட்டது...! - மா. சுப்பிரமணியன் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது, 1256 முகாம்கள் மூலம் மக்களைத்தேடி உயர் மருத்துவ சேவைகள் ரூ.9.42 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், மாதிரி மருத்துவ முகாம் இன்று நடந்ததை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

மா.சுப்பிரமணியன்:

அதன் பிறகு அவர் இது குறித்து தெரிவித்ததாவது,"இந்த மாதம் முதல் ஜனவரி 4-ம் வாரம் வரை 1256 உயர் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது.இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார்.

அதன்பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் இயங்கும்.இந்த மாதம் முதல் ஜனவரி 2026 வரை திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் ஈ.சி.ஜி. இதய சுருள் அறிக்கை, எக்கோகார்டியோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறிதல் சோதனைகள், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனைகள், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் நடக்கும்" என்று தெரிவித்தார்.

இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மேலும் இதற்கு மக்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

free medical camp has arrived once a week Ma Subramanians announcement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->