இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமல்: மே 12-இல் பேச்சுவார்த்தை..!
Ceasefire between India and Pakistan to be implemented Talks on May 12th
இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று மாலை 05 மணி முதல் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. வரும் 12-ஆம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் போர் நிறுத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள், என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) நமது நாட்டு டிஜிஎம்ஓ., வை இன்று மாலை 03: 35 மணிக்கு அழைத்து பேசியதாகவும், அப்போது இன்று மாலை 05:00 மணி முதல் தரை, வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும், துப்பாக்கிச்சூட்டையும் நிறுத்தி கொள்வது என இருதரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் அறிவித்துள்ளார்.
இது குறித்து இரு தரப்பும் உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. இருநாட்டு டிஜிஎம்ஓ.,க்களும் வரும் 12-ஆம் தேதி நண்பகல் 12:00 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று வெளியுறவு செயலர்
கூறியுள்ளார். அத்துடன், இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Ceasefire between India and Pakistan to be implemented Talks on May 12th