'சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கோயில் தந்திரிக்கு எதிராக சாட்சியமில்லை'; குற்​ற​வியல் நீதி​மன்​றம்..! - Seithipunal
Seithipunal


கேரளா சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் தங்​கம் திருட்டு தொடர்​பான 02 வழக்​கு​களில் கோயில் தந்​திரி​யான கண்​டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டு திரு​வனந்​த​புரம் மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராஜீவருவின் ஜாமீன் மனு மீதான விசா​ரணை கொல்​லம் குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. குறித்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம் அவருக்கு ஜாமீன் வழங்​கியுள்ளது. வழக்கு விசா​ரணை​யின்போது தந்​திரி​யின் சார்​பில் நீதி​மன்​றத்​தில் ஆஜரான வழக்​கறிஞர் பேசுகையில் கூறியதாவது;

'உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி 2018-இல் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் பெண்​கள் நுழைந்து தரிசனம் செய்ய கேரள மாநில அரசு அனு​ம​தித்​தது. அதற்கு அப்​போது கண்​டரரு ராஜீவரு கடும் எதிர்ப்பு தெரி​வித்​தார். அதற்கு பழி​வாங்​கும் நடவடிக்​கை​யாக இந்த தங்​கத் திருட்டு வழக்கை கேரள அரசு அதி​காரி​கள் தொடர்ந்​துள்​ளனர்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்​கு விசாரணையில், கண்​டரரு ராஜீவருக்கு எதி​ராக எந்​தச் சாட்​சி​ய​மும் இல்லை என்று கொல்​லம் குற்​ற​வியல் நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. மேலும், அவரை வேண்​டுமென்றே கேரள போலீ​ஸார் கைது செய்து விசா​ரணை நடத்​தி​ய​தாக​வும், இது பழி வாங்​கும் நடவடிக்கை என்றும் எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டி​யுள்​ளன.

அத்துடன், இந்த தங்​கம் திருட்டு வழக்​கில் முன்​னாள் தேவஸ்​வம் போர்டு அமைச்​சர் கடக்​கம்​பள்ளி சுரேந்​திரன் சம்​பந்​தப்​பட்​டுள்​ளார். அதை திசை திருப்​பவே தந்​திரி கண்​டரரு ராஜீவருவை கேரள போலீ​ஸார் கைது செய்​துள்​ளதாக பாஜக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சுமத்​தி​யுள்​ளன. 

மேலும், கண்​டரரு ராஜீவருவை கைது செய்​தது தொடர்​பாக கேரள அரசு உரிய விளக்​கம் அளிக்க வேண்​டும்​ என்​றும்​ எதிர்க்கட்சிகள் ​கோரிக்கை விடுத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Criminal Justice Ministry says there is no evidence against temple priest in Sabarimala gold theft case


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->