தொடர் போராட்டத்திற்கு பலன்; அரச மருத்துவமனை ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு: தமிழக அரசு ஒப்புதல்..!
Tamil Nadu government approves paid maternity leave for government hospital contract nurses
தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு செவிலியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகுபோராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஒப்பந்த செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.
அதன்படி, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை தற்போது ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கானஅதிகாரப்பூர்வ அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government approves paid maternity leave for government hospital contract nurses