ஒருவழியாக  விவசாயி சின்னம் கிடைத்தது..சீமான் மகிழ்ச்சி!  - Seithipunal
Seithipunal


மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 2016-ல் மெழுகுவர்த்தி சின்னத்திலும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்திலும் தேர்தலை சந்தித்தது. அதன்பிறகு 2024நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.

இதையடுத்து,  மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.இதனை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதன்படி, கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அந்த  சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைத்துள்ளதால் சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In one way the farmer got a symbol Seeman is happy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->