'ஜனநாயகன்' ரிலீஸ் தள்ளிவைப்பு: திரைத்துறையினர் கடும் கண்டனம்!
jana nayagan issue bjp tvk dmk
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்ட இழுபறி, தற்போது தமிழ் திரையுலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரித் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்குத் தள்ளிவைத்ததால், படத்தின் ரிலீஸ் அதிகாரப்பூர்வமாகத் தள்ளிப்போயுள்ளது.
இதுகுறித்துத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்டுப்பாட்டை மீறிய சூழலால் கனத்த இதயத்துடன் ரிலீஸைத் தள்ளிவைக்கிறோம். உங்கள் ஆதரவே பலம்" எனத் தெரிவித்துள்ளது.
திரையுலக பிரபலங்களின் எதிர்வினைகள்:
அஜய் ஞானமுத்து: இது ஒரு "அதிகார துஷ்பிரயோகம்". ஒரு படத்திற்குப் பின்னால் பலரின் உழைப்பு உள்ளது. தலைவன் படம் எப்போது ரிலீஸோ அப்போதுதான் தியேட்டர் செல்வேன் என ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் இசக்கி: அரசியல் உள்நோக்கத்தோடு அரசு நெருக்கடி கொடுத்தாலும், மத்திய அரசிடம் கெஞ்சாமல் நீதிமன்றத்தை நாடியது சரியான முடிவு எனப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் ரத்னகுமார்: கொரோனா காலத்தில் தமிழ் சினிமாவை மீட்டவர் விஜய்; அவர் மீண்டும் அதைச் செய்வார். படம் வெளியாகும் நாள்தான் எங்களுக்கு விழா எனக் குறிப்பிட்டுள்ளார்.
சனம் ஷெட்டி: இது அநியாயத்தின் உச்சம். படம் பொங்கலுக்கு வராவிட்டால் என்ன, படம் வெளியாகும் நாள்தான் எங்களுக்குப் பொங்கல் என ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிபிராஜ் & ஜான் மகேந்திரன்: "வெற்றி நிச்சயம்", "நம்பிக்கையோடு இருங்கள்" என விஜய்க்குத் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.
தணிக்கைச் சிக்கல்கள் முடிந்து படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரைத்துறையினர் ஓரணியில் நின்று தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
jana nayagan issue bjp tvk dmk