சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; போலீஸ் கமிஷனர் அருண் பேட்டி..! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் அருண் பேட்டியளித்துள்ளார். 

அதில் அவர் கூறியதாவது:  பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களுடன் மக்களாக காவல்துறையினர் மப்டியில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேக நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று அவர்கள் கண்காணிப்பர் என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் சீருடையுடன் இருப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நகரத்தின் அணைத்து பகுதிகளிலும் வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,  சென்னை போலீசில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் ரவுடிகள் அட்டகாத்தை ஒழிப்பது என 03 பிரிவுகளை உருவாக்கி உள்ளதாகவும், இதன் மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என போலீஸ் கமிஷனர் அருண் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Security arrangements are intensified in Chennai Police Commissioner Arun interview


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->