பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது - பாகிஸ்தானை எச்சரித்த இந்திய ராணுவம்.!!
indian army warning not accept attack to peoples
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரில் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மட்டுமல்லாமல், ராஜஸ்தான் உள்பட எல்லையோர மாநிலங்களிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதனால் எல்லைப்பகுதியில் உச்ச கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
இதேபோல், நேற்றும் காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத்தின் பூஜ் வரையிலான 26 இடங்களை பாகிஸ்தான் டிரோன்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனை இந்தியா முறியடித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் ஒரு குடியிருப்புப் பகுதியில் ஆயுதமேந்திய ட்ரோன் ஒன்று தாக்கியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, அந்தப் பகுதி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மீதான தாக்குதலை ஏற்க முடியாது என்று இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும், இந்திய இறையாண்மையை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகவும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
English Summary
indian army warning not accept attack to peoples