நாட்டுக்காக குவிந்த இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள்...! - பஞ்சாப் - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது.இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் ராணுவத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வகையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரிலுள்ள காவல் துணை கமிஷனர், 18 வயதுக்கு மேலுள்ள ஆண்கள், பெண்கள் தன்னார்வலர்கள்  உடனடியாக பதிவு செய்து ராணுவத்துக்கு உதவுமாறு தெரிவித்திருந்தார்.

அதற்கான பதிவு இன்று காலை 10.30 மணிக்கு, பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பகுதியில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று காலை முதலே இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அந்த பகுதிக்கு வரத் தொடங்கினார்கள். இதில் 100-க்கணக்கானோர், அந்த பகுதியில் கூடி தங்களின் பெயர்களை பதிவு செய்து இந்திய ராணுவத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

அவர்களுக்கு பயிற்சி அளித்து ராணுவ வீரர்களுக்கு உதவ எப்படி பயன்படுத்தப்படுவார்கள் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 வாரம் தீவிர பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு பிறகு எங்கெங்கு பதட்டமான சூழல் இருக்கிறதோ அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள்.

பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.மேலும், அவர்களுக்கு காவலர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதில், முதலுதவி அளிப்பதற்கான பயிற்சி, பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது போன்ற பயிற்சிகளும் வழங்கப்படும்.

மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட், சினிமா தியேட்டர், ரெயில் நிலையங்களில் இந்த தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young women and youth gathered for the country Punjab


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->