தமிழக அரசின் நான்காண்டு ஆட்சி சாதனையா? வேதனையா? என்பது பிறகு பேசுவோம்...! - அண்ணாமலை
four year rule TN government an achievement Or pain We will talk about it later Annamalai
இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு, தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் ''அண்ணாமலை'' வந்தார். அவருக்கு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் 'சித்ராங்கதன்' தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அதற்குபின்,செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது,"இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இன்று, நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையிலுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களைதான் நாம் அழிக்கின்றோம். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிலுள்ள மக்கள் மீது போர் தொடுத்து நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள். இந்தியாவை பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கின்றோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றோம்.
இந்தியாவில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து வரும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான போரை நமது அரசு தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் இந்திய அரசுக்கும், எல்லையோர மக்களுக்கும் துணை நிற்க வேண்டும்.2016-ம் ஆண்டு பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தினார்கள். அதனைப் பார்வையிட பாகிஸ்தான் ராணுவத்தினரை அழைத்து வந்தோம்.
திரும்பிச் சென்றவர்கள் நமது நாட்டை அவமானப்படுத்தினர். அதே ஆண்டு, உரி பகுதியில் ராணுவ முகாமில் 23 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். 2019-ல் புல்வாமா தாக்குதலில் 46 பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.தற்போது 2025-ம் ஆண்டு பஹல்காமில் 25 இந்தியர்கள், ஒரு நேபாளி உட்பட 26 பேரை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர்.
அதில் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர் என்று பார்த்து படுகொலை செய்துள்ளனர். ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வந்திருக்கிறது.நமது நாட்டு கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ராணுவம் இல்லை. ராணுவ கட்டுப்பாட்டில் தான் அந்த அரசு இருக்கிறது. இந்த தாக்குதல் இன்று, நாளை முடிய போவது இல்லை. அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகின்றோம்.நாம் ரஷியா-உக்ரைன் போல் எல்லையை பிடிப்பதற்காக போர் நடத்தவில்லை.
தீவிரவாதத்திற்கு எதிராக நடத்துகின்றோம். நாம் பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறோம். பாகிஸ்தான் நலிவடைந்த நிலையில் இருக்கிறது. 12-க்கு 1 என்ற அளவில் இருந்து வருகிறது.நாம் நினைத்தால் பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்க முடியும்.பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போர் நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். போர் இன்று, நாளை முடியாது.
இதற்கு மேல் நாம் போக தான் போகிறோம். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும்.இந்திய அரசுக்கு, ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் பேரணி வரவேற்கத்தக்கது. இதுபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூரின், ராணுவத்திற்கும், இந்திய அரசுக்கும் ஆதரவான பேச்சு மிக மிக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. தமிழக அரசின் 4 ஆண்டு ஆட்சி சாதனை என்பது சாதனையா? வேதனையா? என்பதை பின்னர் பேசுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
four year rule TN government an achievement Or pain We will talk about it later Annamalai