இந்திய இராணுவத்திற்கு ஆதரவாக CM ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி!
CM Stalin Support Indian Army
பாகிஸ்தான் நடத்திய அத்துமீறல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ராணுவம் காட்டும் வீரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் போர் நினைவுச்சின்னம் வரை இன்று மாலை 5 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கிய இந்த பேரணியில், அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். அனைவரும் கையில் தேசியக் கொடியுடன் இந்திய ராணுவத்திற்கு ஒற்றுமையான ஆதரவை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சர் ஸ்டாலின் முன்னதாகவே, “இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெறும்” என அறிவித்திருந்தார்.
பேரணி செல்லும் வழியில் மருத்துவ முகாம்கள், குடிநீர் வழங்கும் தொட்டிகள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் முழுமையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த பேரணி, நாட்டுப்பற்றை வலியுறுத்தி, பொதுமக்களிடம் ராணுவத்திற்கான ஆதரவை உணர்த்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
English Summary
CM Stalin Support Indian Army