தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம்? முழு லிஸ்ட் இதோ - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்குவதற்கு முன்பு தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 ஆக இருந்தது. தற்போது 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டதன் காரணமாக, தமிழகத்தின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 ஆக குறைந்துள்ளது என அவர் கூறினார்.

‘சார்’ எனப்படும் இந்த சிறப்பு திருத்த நடவடிக்கை கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. சார் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்க டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாகவும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் அடிப்படையில் சென்னை, திருவள்ளூர், கோவை, திருப்பூர், செங்கல்பட்டு, சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்டங்களுக்கு இடையே நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் உரிய காலக்கெடுவிற்குள் ஆட்சேபனை தெரிவித்து, தேவையான படிவங்களை சமர்ப்பித்து மீண்டும் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விரிவான வழிமுறைகள் தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How many voters have been removed from which districts in Tamil Nadu Here is the full list


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->