2 பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 வாலிபர்கள்! 
                                    
                                    
                                    Three youths sexually assaulted 2 schoolgirls
 
                                 
                               
                                
                                      
                                            பள்ளி மாணவிகள் இருவருக்கு மது கொடுத்து மயங்க செய்து, ஓட்டல் குளியலறையில் வைத்து வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் களக்கூட்டம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு  3 வாலிபர்கள் மற்றும் 2 மைனர் சிறுமிகள் வந்துள்ளனர்.அப்போது பள்ளி படிக்கும் அந்த சிறுமிகள், தங்களை அழைத்து வந்த வாலிபர்களுடன்  அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை அதிகமாகி மாணவிகள் இருவரும் மயக்கமடைந்தனர்.
இதையடுத்து போதையை தெளியவைக்க முகத்தை கழுவ அறைக்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, மாணவிகள் இருவரையும் அங்குள்ள ஒரு அறையில் இருந்த குளியலறைக்கு வாலிபர்கள் தூக்கிச் சென்று
மயக்க நிலையிலேயே 3 வாலிபர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து வெகுநேரமாகியும் மாணவிகளுக்கு மயக்கம் தெளியாததால் அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
 மேலும் மாணவிகள் குறித்து, அவர்களது பெற்றோருக்கும் தகவல் கொடுத்ததையடுத்து  பெற்றோர் மருத்துவமனைக்கு சென்றனர்.
இந்தநிலையில் மாணவிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர்கள் மயக்கம் தெளிந்து எழுந்ததையடுத்து தங்களை 3 வாலிபர்களும் சேர்ந்து ஓட்டல் குளியலறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த தகவலை மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், அது பற்றி தும்பா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து திருவனந்தபுரம் சங்குமுகத்தை சேர்ந்த எபின், அபிலாஷ், பைசர்கான் ஆகிய வாலிபர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.  3 வாலிபர்களின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
பள்ளி மாணவிகள் இருவருக்கு மது கொடுத்து மயங்க செய்து, ஓட்டல் குளியலறையில் வைத்து வாலிபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                        Three youths sexually assaulted 2 schoolgirls