ஒடிசா ரயில்கள் விபத்து! நேரில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunalஒடிசா மாநிலம், பாலசோர் பகுதியில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஷாலிமர் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. 

தொடர்ந்த அடுத்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் மீது, யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில் மோதி, அடுத்தடுத்து பெரும் விபத்து நிகழ்ந்தது. 

இந்த கொடூரமான விபத்தில் சிக்கி இதுவரை 261 பலியாகியுள்ளனர். 900 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், விபத்து நடந்த பகுதியை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

புவனேஸ்வர் விமானநிலையத்தில் இருந்து விபத்து பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். 

பின்னர், ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, அதிகாரிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து, இந்த ரயில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் பிரதமர் சந்திக்க புறப்பட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Odisha Train Accident Tragedy PM Narendra Modi inspection


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal