நேபாள பனிப்பாறைச் சரிவு பேரழிவு: பலி எண்ணிக்கை 1,252 ஆக உயர்வு; 4,800-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிர வீச்சு - Seithipunal
Seithipunal


திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் பனிப்பாறைச் சரிவு, இமயமலைப் பிராந்தியத்தில் கற்பனை செய்ய முடியாத அளவிலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதியில் சீறிப் பாய்ந்து சகதி, பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளுடன் பல அடி உயரத்திற்குப் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருந்த கிராமங்கள், சிறு நகரங்கள், வீடுகள், பாலங்கள், சாலைகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்புகளும் இந்தச் சீற்றத்தில் அடியோடு அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் உருக்குலைந்தன.

இந்தப் பெருவெள்ளம் திரிசூலி மற்றும் நாராயணி நதிகளிலும் கலந்து ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோர்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களை மிகக் கடுமையாகப் புரட்டிப் போட்டுள்ளது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து 9-ஆவது நாளாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பேரழிவில் இந்தியர்கள் 275 பேர் உட்பட 4,875-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று இதுவரை தெரியாத சூழல் நிலவுகிறது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் சவாலான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை மீட்டெடுக்கப்பட்ட உடல்களில் 77 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தின் வீரியத்தால் பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குச் சிதைந்துபோயுள்ளன. இதனால் சர்வதேச விதிகளின்படி, உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து டிஎன்ஏ (DNA) மாதிரிகளைச் சேகரித்த பின்னர் அரசே பொறுப்பேற்று இறுதிச் சடங்குகளை முறைப்படி செய்து வருகிறது. மற்றொருபுறம், காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்கள் கிடைக்காத சோகத்தில், உறவினர்கள் உருவபொம்மைகளைச் செய்து வைத்து இறுதிச் சடங்குகளை நிறைவேற்றும் நெஞ்சைப் பிழியும் சம்பவங்களும் அப்பகுதியில் அரங்கேறி வருகின்றன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nepal Glacial Outburst Disaster Death Toll Mounts to 1252 as Search for Missing Thousands Continues


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->