'மும்பையில் குடியேறிவிட்டாரா'...? சூர்யா சொன்ன ஒரே பதில்... பரபரப்புக்கு முற்றுப்புள்ளி...!
Has he settled Mumbai Suriya only answer put end excitement
மனைவி ஜோதிகாவுடன் சூர்யா மும்பையில் குடியேறிவிட்டதாக சமீப காலமாக திரையுலகில் பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு தெளிவான பதிலை அளித்துள்ளார் சூர்யா. “நான் சென்னையில்தான் இருக்கிறேன். இங்கிருந்துதான் மும்பைக்கு சென்று வருகிறேன்” என்று அவர் வெளிப்படையாக கூறியிருப்பது, மும்பையில் குடியேறிவிட்டதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார்-2’ திரைப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மண் குமார், இஷான் சக்சேனா, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற 10-ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இதையொட்டி, ‘சர்தார்-2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சூர்யா, மும்பை வாழ்க்கை தொடர்பாக பரவி வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.அப்போது அவர், “நான் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து செல்வதாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சென்னையில்தான் இருக்கிறேன்.
இங்கிருந்துதான் மும்பைக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன். இனிமேல் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.சூர்யாவின் இந்த வெளிப்படையான பதில், அவர் மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறிவிட்டதாக வெளியான தகவல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.விழாவில் நடிகர் கார்த்தியிடமும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, அவரது அண்ணன் சூர்யா நடித்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் ரூ.250 கோடி வசூலை ‘சர்தார்-2’ முறியடிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த கார்த்தி, “அண்ணனைத் தம்பி மிஞ்சினால் சந்தோஷம்தான். என்னைப் பொறுத்தவரை திரைப்படத்திற்காக முதலீடு செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியம்” என்று கூறினா.
மேலும், ‘சர்தார்-2’ திரைப்படம் வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல், முக்கியமான சமூகப் பிரச்சினை ஒன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கார்த்தி தெரிவித்தார்.சூர்யாவின் மும்பை வாழ்க்கை குறித்த சர்ச்சைக்கு அவரது நேரடியான பதிலும், ‘சர்தார்-2’ படத்தின் வசூல் குறித்த கார்த்தியின் கருத்தும் விழாவில் கவனம் ஈர்த்தன.
English Summary
Has he settled Mumbai Suriya only answer put end excitement