‘ஜனநாயகன்’ படத்துக்கு அடுத்து சென்சார் போர்டின் அதிரடி முட்டுக்கட்டை! பிரசாந்த் நீல் வழங்கும் ‘418’ ரிலீஸ் தள்ளிவைப்பு – என்ன காரணம்? - Seithipunal
Seithipunal


‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் போர்டின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மற்றும் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்டபடி திரைக்கு வர முடியாமல் சட்டப் போராட்டத்தை சந்தித்த நிலையில், தற்போது மற்றொரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படத்தின் ரிலீஸும் சென்சார் பிரச்சினையால் கேள்விக்குறியாகியுள்ளது.

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் வழங்கும் ‘418’ என்ற தெலுங்கு ஹாரர் திரைப்படம் சென்சார் சிக்கலில் சிக்கியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தன் நடகவுடா இப்படத்தை இயக்கியுள்ளார். சூரியா ராஜ், சரண் லக்கராஜு, ப்ரீத்தி பகடாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘418’ திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதற்கான போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால், தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்த பின்னர், அதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் அதிகளவில் பயமுறுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சான்றிதழ் வழங்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாரர் திரைப்படத்தின் முக்கிய அம்சமே பயமுறுத்தும் காட்சிகளாக இருக்கும் நிலையில், அதையே காரணமாகக் குறிப்பிட்டு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுப்பது எந்த அளவுக்கு நியாயமானது என்ற கேள்வியை திரையுலகைச் சேர்ந்த பலரும் எழுப்பி வருகின்றனர்.

சென்சார் போர்டின் இந்த முடிவைத் தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், இப்படத்தை ‘ரிவைசிங் கமிட்டி’க்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திட்டமிட்ட ஜூலை 31ஆம் தேதி வெளியீடு சாத்தியமாகாத நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளது.

ஏற்கனவே ‘ஜனநாயகன்’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கல்களால் திட்டமிட்ட தேதியில் வெளியாக முடியாமல் போனதாக திரையுலகில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதுபோன்ற தாமதங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நிதி இழப்பையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், திரைப்படங்களின் கதை மற்றும் காட்சிகள் தொடர்பான தணிக்கை முடிவுகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வகை திரைப்படத்தின் இயல்பான அம்சங்களையே காரணமாகக் கொண்டு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள், சினிமா வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையே, ‘418’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. பிரசாந்த் நீல் வழங்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள், சென்சார் சிக்கல் காரணமாக வெளியீடு தள்ளிப்போனதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ரிவைசிங் கமிட்டியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதையும், ‘418’ திரைப்படம் எந்த தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After the movie Jananayagan the Censor Board throws a major roadblock Release of 418 presented by Prashanth Neel postponed what is the reason


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->