“சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பேன்!” 5-ம் வகுப்பிலேயே அம்மாவிடம் சவால் விட்ட கீர்த்தி சுரேஷ்.. சொன்னபடியே நடந்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அழகுடன் சிறந்த நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி வரும் அவர், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான 'மகாநடி' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் உருவாகி வரும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை மேனகா மற்றும் தயாரிப்பாளர் ஜி. சுரேஷ்குமார் தம்பதிக்கு மகளாகப் பிறந்த கீர்த்தி சுரேஷ், சிறு வயது முதலே திரைத்துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும், கதாநாயகியாக அவரது தமிழ் சினிமா அறிமுகம் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அமைந்தது.

அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அங்கு பிஸியான நடிகையாக மாறினார்.

இந்த நிலையில், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான 'மகாநடி' திரைப்படம் கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் 'நடிகையர் திலகம்' என்றும் வெளியான இந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறி கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

இருப்பினும், தேசிய விருது கிடைத்த பிறகும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. அந்த சூழலில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் நடித்தார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக அமைந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்திலும் மீண்டும் வேகம் அதிகரித்தது.

தொடர்ந்து 'சைரன்', 'ரகுதாத்தா' உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், விஜய் நடித்த 'தெறி' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதற்கிடையே, நீண்டகாலமாக காதலித்து வந்த ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார் கீர்த்தி சுரேஷ். கோவாவில் நடைபெற்ற இந்தத் திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அவர், அடுத்தடுத்து பல்வேறு மொழிகளில் உருவாகி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது சிறு வயதில் தாயார் மேனகாவிடம் விட்ட சவால் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.

நடிகை மேனகா, நடிகர் சிவகுமாருடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் 5-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, தனது தாயார் மேனகாவும் சிவகுமாரும் இணைந்து நடித்த திரைப்படம் ஒன்றைப் பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவகுமாரின் மகன் சூர்யாவை பார்த்த கீர்த்தி சுரேஷ், “நான் வளர்ந்த பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பேன்” என்று தனது தாயிடம் சவால் விட்டதாக அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சிறு வயதில் விளையாட்டாக கூறிய அந்த வார்த்தையை கீர்த்தி சுரேஷ் பின்னர் நிஜமாக்கியதும் குறிப்பிடத்தக்கது. சூர்யாவுடன் இணைந்து 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்தார். 5-ம் வகுப்பில் படித்தபோது தனது தாயிடம் கூறிய ஆசை, பல ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் நிஜமானது என்பதுதான் இந்த சம்பவத்தின் சுவாரஸ்யம்.

சிறு வயதிலேயே தனக்கென ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதை அடைந்த சம்பவத்தை கீர்த்தி சுரேஷ் தானே பகிர்ந்திருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will act opposite Suriya Keerthy Suresh challenged her mother while still in the 5th grade and it actually happened just as she said


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->