தலைமைச் செயலகத்தை கதிகலங்க வைத்த விவசாயிகள்!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநில தலைமை செயலகத்திற்குள் புகுந்து விவசாயிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை செயலகத்திற்குள் கூட்டமாக புகுந்த விவசாயிகள் கட்டிட மாடியில் இருந்து கீழே குதித்த அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மும்பையில் உள்ள தலைமை செயலகத்திற்குள் திடீரென இன்று விவசாயிகள் புகுந்தனர்.

வறட்சியால் உண்டான பாதிப்பிற்கு இழப்பீடு வழங்க கோரியும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தலைமை செயலகத்த்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி உள்ளே புகுந்த விவசாயிகள், தலைமை செயலக கட்டிட மாடியில் இருந்து விவசாயிகள் கீழே குதித்தனர்.

நல்வாய்ப்பாக தலைமை செயலகத்தில் வலை அமைக்கப்பட்டிருந்ததால் மாடியில் இருந்து குதித்த விவசாயிகள் அதிர்ஷ்டவசமாக வலையில் விழுந்து உயிர் பிழைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharastra Farmers protest incident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->