சந்தோசமாக ஊருக்கு சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 30 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து.. அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மால்காபூர் பகுதியில் இருந்து குஜாரத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை நோக்கி, தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த பேருந்து இன்று (22 அக்டோபர் 2020) அதிகாலை 3.15 மணியளவில் கொண்டாய் பரி பகுதியில் உள்ள மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்துள்ளது. 

இதன்போது முன்னாள் சென்று கொண்டு இருந்த பேருந்தை முந்திச்செல்ல ஓட்டுநர் முயற்சி செய்த நிலையில், எதிர்புறத்தில் லாரியொன்று வந்துள்ளது. இதனைக்கண்டு பெரும் திகைப்பிற்கு உள்ளாகிய ஓட்டுநர், பேருந்தை விபத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு திருப்பியுள்ளார். 

இதில், அதிஷ்டமின்மை காரணமாக பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, 30 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்ற காரணத்தால் பயணிகள் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், நொடிப்பொழுதில் பேருந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.

பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் காப்பாற்ற கூறி மரண ஓலம் எழுப்பவே, இதனைக்கண்ட வாகன ஓட்டிகள் காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் அதிகாரிகள் வந்த நிலையில், சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடலை மீட்டனர். 

மேலும், பேருந்தில் பயணம் செய்த 34 பயணிகள் காயமடைந்த நிலையில், இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விசர்வாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maharashtra Malkapur Bus Accident 5 peoples died 34 person injured


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal