கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி; ஜெர்சி No.7-ஐ 08 என மாற்றும் எம்.எஸ்.தோனி; என்ன காரணம்..? - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் விளையாட்டில் நம்பர் 7 யாருடைய ஜெர்சி நம்பர் என்று சின்ன குழைந்தைகளிடம் கேட்டல் கூட அது மஹேந்திர சிங் தோனி உடையது என்று சொல்லுவார்கள். உலகவில் நம்பர் 7 ஜெர்சி அவ்வளவு பிரபலம்.

பொதுவாகவே விளையாட்டில் சில எண்கள் அவர்களின்  அடையாளமாகவே மாறிவிடும், அந்தவகையில் கால்பந்தில் நம்பர் 7 ரொனால்டோ மற்றும் நம்பர் 10 மெஸ்ஸியின் ஐகானிக் ஜெர்சி நம்பர்களாக உள்ளன. அப்படியே கிரிக்கெட்டிலும் நம்பர் 7 என்றால் தோனி, நம்பர் 10 என்றால் சச்சின் என்ற அடையாளத்தை குறிக்கின்றன.

அதிலும் சமீபகாலமாக ஒரு வெற்றி தோல்வியில்,7 ரன்கள் வித்தியாசத்திலோ, 07 பந்துகள் வித்தியாசத்திலோ இந்தியா வென்றால் கூட ‘Thala For a Reason' என பல கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டஅனைத்து ஐபிஎல் பிரான்சைஸ் அணிகள் வரை கொண்டாடி வருகின்றனர். அதாவது, தோனியின் நம்பர் 7 என்ற ஜெர்சிக்கு அவ்வளவு மேஜிக் உண்டு.

இந்தசூழலில் தான் இனிமேல் நம்பர் 7 ஜெர்சியை பயன்படுத்த போவதில்லை என்றும், நம்பர் 8-க்கு மாறுவதாகவும் தோனியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியாகியுள்ளது.

தோனியின் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள பதிவில், ''சில எண்கள் உங்களுடன் நீடித்து இருக்கும், அப்படியான எண்களில் ஒன்று தான் 7. ஆனால் இன்று.. 8 ஆம் எண்ணிற்கு மாறுகிறேன். இதற்கான காரணத்தை விரைவில் நீங்கள் அறிவீர்கள்'' என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் நம்பர் 7-லிருந்து 8-க்கு மாற்றப்பட்ட ஜெர்சியின் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதற்காக தோனி இந்த முடிவை எடுத்தார்..? என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் தோனியின் முடிவுக்கான காரணங்களாக சில விசயங்கள் சொல்லப்படுகிறது.

தோனி பதிவிட்டிருக்கும் இந்த வீடியோ வணிக விளம்பரத்திற்கானதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேவேளையில் தோனி தற்போது மாற்றியிருக்கும் நம்பர் 8-ஆனது ஜடேஜாவின் ஜெர்சி நம்பராகும், அவர் சென்னை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார். அதனால் அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்காக அதை செய்கிறாரா? என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவரின் ஜெர்சி எண் 7-ஐ பிசிசிஐ ஓய்வு பெற செய்ய முடிவுசெய்தது. அதேபோன்று சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண் ‘10’-க்கு பிறகு, பிசிசிஐ ஓய்வளித்த இரண்டாவது எண் தோனியின் 7-ஆகும். 

ஆனாலும் தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டிகளில் எண் 7-ஐ பயன்படுத்தியே வந்தார். தற்போது தோனி நம்பர் 7-ஐ 8ஆக மாற்றுவதற்கு பல ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். நம்பர் 7 வெறும் எண் அல்ல என்றும், அது ஒரு எமோசன் என்றும் தோனியின் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். தோனி எதற்காக No.7-லிருந்து 8-க்கு மாறுகிறார் என்பது கூடிய விரைவில் தெரியவரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MS Dhoni Changes Jersey No 7 to 08


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->