இந்தியாவை, பாரத மாதாவை பாஜகவினர் கொலை செய்திவிட்டார்கள் - ராகுல்காந்தி ஆவேசம்!
Lok Sabha Rahul Gandhi vs Smruti Rani Speech
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மக்களவையில் அவர் ஆற்றிய உரையில், "மத்திய அரசு தனது செயல்களால் மணிப்பூரை பிளவுப்படுத்தி விட்டது. இந்தியாவை கொலை செய்து விட்டீர்கள்.
மணிப்பூர் மாநிலத்தை போன்று இந்தியாவையும் கொன்று விட்டீர்கள். இந்தியாவை போன்று பாரதமாதாவையும் கொலை செய்து விட்டீர்கள்" என்று ராகுல் காந்தி விமர்சித்து பேசினார்.
அப்போது ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வடகிழக்கு மாநிலங்களை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசுகிறார் என்று குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மணிப்பூரில் இந்திய ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியை கொண்டு வரலாம் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய பாஜக எம் பி ஸ்மிருதி ராணி, இந்த மக்களவையில் மிக மோசமான பேச்சை என்று நாம் கேட்டுள்ளோம். இதனை நான் கண்டிக்கிறேன்.
காங்கிரஸ் என்றாலே ஊழல். ஓழ்த்தாளை பற்றி பேசும் பொது ராகுல்காந்தி தனது கூட்டணியில் உள்ள திமுகவை பார்க்க வேண்டும். இந்தியாவிற்கே ஊழலை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் தான்" என்று ஸ்மிருதி ராணி தெரிவித்தார்.
English Summary
Lok Sabha Rahul Gandhi vs Smruti Rani Speech