கர்நாடக விவசாயிகளின் நலன் காக்க நாங்கள் இருக்கிறோம் - டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5000 கன அடி நீ திறக்க வேண்டும் என காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசு அறிவித்தது.

இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடங்க வழக்கிலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது எனவும் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவை இரு மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதற்கு கர்நாடக மாநில விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் உடன் இணைந்து பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா மாவட்டத்தில் பந்த் நடத்தி வருகின்றனர். 

மேலும், தமிழ்நாடு கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் திரண்ட கன்னட அமைப்பினர் காளி குடங்களுடன் சாலையில் படுத்து உருண்டு போராடினர். இதனால்  தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவிக்கையில், "இந்த விவகாரத்தை அவர்கள் (பாஜக) அரசியல் கோணத்தில் எடுக்கிறார்கள். 

கர்நாடக விவசாயிகளின் நலன் காக்க நாங்கள் இருக்கிறோம். யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்.

'பந்த்' எதுவும் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். கர்நாடகாவின் நலனை காக்க நாங்கள் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Deputy CM Say About Karnataka cauvery issue


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?




Seithipunal
-->