நிச்சயம் செய்யப்பட்ட பெண் இரண்டு நிமிடம் போனில் பேசாததால் விபரீத முடிவெடுத்த மாப்பிளை... அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கனகசெட்டிகுளம் பகுதியை சார்ந்தவர் கோதண்டம். இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். இவரது மகனின் பெயர் சுரேஷ் (வயது 31). இவர் வழக்கறிஞருக்கு பயின்றுவிட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்துள்ளார். 

இந்த நிலையில்., இவர் அங்குள்ள சட்டக்கல்லூரியில் பயின்ற சமயத்தில்., கடலூரை சார்ந்த பெண்ணொருவரும் பயின்று வந்துள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறவே., இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு வரும் 27 ஆம் தேதியன்று திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்டு இருந்த நிலையில்., திருமண அழைப்பிதழை தேர்வு செய்வதற்க்காக இருவரும் நேற்று புதுச்சேரிக்கு வந்துள்ளனர். 

love,

இவர்கள் இருவரும் சேர்ந்து அழைப்பிதழ் விற்பனை கடைக்கு சென்று அழைப்பிதழ்களை தேர்வு செய்துள்ள நிலையில்., அங்குள்ள பொதுஇடங்களுக்கு சென்று பின்னர் இருவரும் தங்களின் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். 

இந்த நேரத்தில் பெண்ணிற்கு அலைபேசியில் சுரேஷ் தொடர்பு கொண்ட நிலையில் துவக்கத்தில் போனை எடுக்க இயலாமல் இருந்துள்ளார். பின்னர் இரவு 11 மணியளவில் பெண்ணிற்கு வீடியோ கால் செய்து பேசி வந்துள்ளனர். 

வீடியோ காலில் பேசிய சுரேஷ் நீ என்னுடன் பேச மறுக்கிறாய்.. நான் தூக்கிடப்போகிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த பெண்மணி சுரேஷின் நண்பரான சிவசக்திக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். 

suicide,

இதனையறிந்த சிவசக்தி சுரேஷின் இல்லத்திற்கு சென்று சோதனை செய்ததில்., சுரேஷ் தனது அறையில் தூக்கிட்டு இருந்துள்ளார். இவரை மீட்ட குடும்பத்தினர் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில்., இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

பின்னர் இது தொடர்பான தகவல் பெண்ணிற்கு தெரியவருவதற்கு முன்னதாகவே., பதற்றமடைந்த பெண் என்ன ஆனது? என்று தெரியாமல் பதற்றத்துடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery love man attempt suicide and died


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal