டிக்கெட் கேட்டது தப்பா...? டிடிஆரை பளார் என அறைந்த கல்லூரி பெண்...! ரயிலுக்குள் நடந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன...?
Was it wrong ask ticket college girl who slapped DTR fool What background heated incident inside train
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் சட்டக் கல்லூரி மாணவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிக்கெட் தொடர்பாக எழுந்த விவாதம், இறுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு தீவிரமடைந்ததால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

நேற்று சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த சட்டக் கல்லூரி மாணவியிடம், பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்கள் வழக்கமான சோதனையின் ஒரு பகுதியாக பயணச்சீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு, தான் ரெயிலில் பயணம் செய்யவில்லை என்றும், உறவினரை வழியனுப்புவதற்காக மட்டுமே நிலையத்திற்குள் வந்ததாகவும் மாணவி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து, பயணச்சீட்டு இல்லையெனில் பிளாட்பார்ம் டிக்கெட்டை காண்பிக்குமாறு டிக்கெட் பரிசோதகர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால், மாணவியிடம் பிளாட்பார்ம் டிக்கெட்டும் இல்லாதது தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின்போது, மாணவியின் செல்போன் தற்காலிகமாக டிக்கெட் பரிசோதகரின் வசம் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவி, தனது செல்போனை உடனடியாக திருப்பித் தருமாறு வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், திடீரென ஆவேசமடைந்த மாணவி, பெண் டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் அறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால், ரெயில் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உருவானது. அப்போது மற்றொரு பெண் டிக்கெட் பரிசோதகரும் அங்கிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரெயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகள் அல்லது பொதுமக்கள் இடையே இதுபோன்ற மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
English Summary
Was it wrong ask ticket college girl who slapped DTR fool What background heated incident inside train