வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி...! மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் தள்ளிப்போகிறதா...? – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கொடுத்த தெளிவான விளக்கம்
end rumors consecration Meenakshi Amman temple being postponed Minister CTR Nirmalkumar gave clear explanation
அறுபடை வீடுகளில் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா, வேத மந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்து ஆன்மிக பரவசம் அடைந்தனர்.

இந்த புனித நிகழ்வில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கும்பாபிஷேக விழா சிறப்பாகவும், எந்தவித சிரமமும் இன்றியும் நிறைவடைந்ததாக தெரிவித்தார்.
மேலும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்ததாகவும், குடிநீர், அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கும்பாபிஷேக விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு திருக்கோவில்களில் அடுத்தடுத்த கும்பாபிஷேக விழாக்கள் நடைபெற உள்ளதாகவும், மதுரையின் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா திட்டமிட்டபடி, எந்தவித தாமதமும் இன்றி சிறப்பாக நடைபெறும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
English Summary
end rumors consecration Meenakshi Amman temple being postponed Minister CTR Nirmalkumar gave clear explanation