திருச்சியிலிருந்து சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து.!
Fire accident in Humsafar Express train from Trichy to Gujarat.
திருச்சியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகருக்கு செல்லும் ஹம்சஃபர் விரைவு ரயிலானது குஜராத் மாநிலம் வல்சாத் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரயில் இன்ஜினியரிங் பின்புறம் உள்ள 2 பெட்டிகளில் தீ பற்றியுள்ளது. இதனை அடுத்து உடனடியாகரயிலில் இருந்த தீயணைப்பனை கொண்டு தீயணைக்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் இரு ரயில் பெட்டிகள் முழுவதும் தீ மளமளவென பரவியதால் தீயணைப்பு முயற்சி கைவிடப்பட்டு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பிறகு தீ பற்றிய இரண்டு பெட்டிகளும் தனியாக பிரிக்கப்பட்டு தீயணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் தொடங்கினர் ஈடுபட்டனர்.
ஆனால் தீ விபத்தில் ரயில் பெட்டிகள் முழுவதும் எரிந்த நாசமாகியது. தீ விபத்து ஏற்பட்ட இரண்டு ரயில் பெட்டிகளில் ஒன்று பயணிகள் பெட்டி எனவும், மற்றொன்று சரக்கு ஏற்றி செல்லும் பெட்டி எனவும் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு பெட்டிகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன நிலையில் தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்ற முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Fire accident in Humsafar Express train from Trichy to Gujarat.