இனி 2,000 ரூபாய் நோட்டு வாங்கக் கூடாது - நடத்துனர்களுக்கு அதிரடி உத்தரவு.!
conductorsnot accepted 2000 notes from passengers tnstc order
இனி 2,000 ரூபாய் நோட்டு வாங்கக் கூடாது - நடத்துனர்களுக்கு அதிரடி உத்தரவு.!
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும், 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அதனை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதற்காக 5 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ஏராளமானோர் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர்.

ரிசர்வ் வங்கி கொடுத்த காலக்கெடு இன்னும் நான்கு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், இந்த வாரத்தில் வரும் 27, 29, 30 ஆகிய நாட்களில் மட்டுமே வங்கிகள் இயங்கும். 28-ம் தேதி மிலாது நபிக்காக, வங்கி விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2,000 ரூபாய் நோட்டுக்களை பயணிகளிடம் இருந்து நாளை செப்.28 முதல் வாங்கக்கூடாது என்றும், மீறி வாங்கினால், அதற்கு நடத்துனர்களே பொறுப்பு என்றும் கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
conductorsnot accepted 2000 notes from passengers tnstc order