சாதித்துக் காட்டிய  நிதிஷ்குமார்! பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் சாதிகள் அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த கணக்கெடுப்பின் மூலம் பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிய வந்துள்ளது. 

இதில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 3 கோடியே 54 லட்சத்தி 63 ஆயிரத்து 936 பேர் இருக்கின்றனர். அதாவது 27.12 சதவிகிதம் பேர் BC பிரிவில் வருகிறார்கள். 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 4 கோடியே 70 லட்சத்து 80 ஆயிரத்து 514 பேர் இருக்கின்றனர். அதாவது 36.01 சதவிகிதம் பேர் EBC பிரிவில் வருகிறார்கள். 

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர் இருக்கின்றனர். அதாவது 19.65 சதவிகிதம் பேர் SC பிரிவில் வருகிறார்கள். 

பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் 21 லட்சத்தி 99 ஆயிரத்து 361 பேர் இருக்கின்றனர். அதாவது 1.68% சதவிகிதம் பேர் ST பிரிவில் வருகிறார்கள். 

பொது பிரிவினைச் சேர்ந்தவர்கள் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் அதாவது மொத்த மக்கள்தொகையில் 15.52  சதவிகிதம் பேர் FC பிரிவில் வருகிறார்கள். 

பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் அரசு சொன்னப்படி, பல்வேறு தடைகளைக் கடந்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிந்துவிட்டது. இது சமூகநீதிக்கான பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வாக அமையும் என நம்பிக்கை உருவாகியுள்ளது. 

இதேபோல தமிழகத்திலும் பல்வேறு இட ஒதுக்கீடு சிக்கல்கள் இருப்பதால், அதனை தீர்க்கும் வகையில், சமூகநீதியை காக்கும் அரசு என கூறிக்கொள்ளும் திமுகவின் ஸ்டாலின் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முன்வருமா என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

தற்போதைய மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் இதுவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் தீவிரமாக தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசி வருவதால், அதனை சாதித்துவிட்ட பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பிரதமர் வேட்பாளராக வர வாய்ப்புள்ளதாக கருதுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Caste based Census Report By Bihar Govt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->