மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து செல்லாது - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் சிந்தட ஆனந்த், தன்மீது சாதி பெயரை கொண்டு ஆபாசமாக பேசியதாக குற்றம்சாட்டி, பட்டியலினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ராமிரெட்டி தரப்பில், ஆனந்த் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்துமதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்தை ஏற்று, தற்போது மதபோதகராக செயல்பட்டு வருவதால், அவருக்குப் பட்டியலின அந்தஸ்து கிடையாது என்றும், ஆகையால் அந்தச் சட்டம் இங்கே பொருந்தாது என்றும் வாதிடப்பட்டது.

ஆனால் ஆனந்த் தரப்பில், தன் வசம் செல்லத்தக்க சாதிச்சான்று இருப்பதாகவும், அதன்மூலம் சட்டப்பாதுகாப்பு தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இரு தரப்புகளையும் கவனித்த நீதிபதி ஹரிநாத், மதம் மாறிய நிலையில் பட்டியலின அந்தஸ்து செல்லாது எனத் தெரிவித்தார்.

எனவே, அந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர இயலாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், மனுதாரரின் சாதிச்சான்றை அதிகாரிகள் மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra highcourt order SC status after conversion to other faith


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->