அமலாக்கத்துறையின் வழக்குகளில் 98 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானது: சாகேத் கோகலே..! - Seithipunal
Seithipunal


அரசியல்வாதிகள் மீதான அமலாக்கத்துறையின் வழக்குகளில் 98 சதவீதம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரானது என்றும், மீதமுள்ள 02 சதவீதம் இங்கிருந்து வெளியேறி, பாஜக-வின் வாஷிங் மெஷினில் இணைந்தவர்கள் என  திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சாகேத் கோகலே தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

நேற்று அமலாக்கத்துறை டைரக்டர், பிரதமர் மோடி 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு,  கடந்த 11 வருடத்தில் அமலாக்கத்துறையால் 5,297 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவைகளில் எத்தனை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன?. வெறும் 47 வழக்குகள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் 0.7 சதவீதம் என்றும், இதன் அர்த்தம் ஒவ்வொரு 1000 வழக்குப் பதிவுகளுக்கு வெறும் 07 வழக்குகளில் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளியாக கண்டறியப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  ஒவ்வொரு 1000 வழக்குகளிலும், 993 வழக்குகள் ஒருவரை சிறையில் வைத்திருப்பதற்காகவே அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்படுகின்றன எனவும், ஏனெனில் கடுமையான பணம் மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமின் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று சாகேத் கோகலே பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

98 percent of Enforcement Directorate cases are against opposition leaders Saket Gokhale


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->