பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் பிரதமரை சந்தித்துள்ள காஷ்மீர் முதலமைச்சர்..!
Kashmir Chief Minister meets Prime Minister after the Pahalgam attack
பிரதமர் நரேந்திர மோடியை ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடியை, உமர் அப்துல்லா சந்தித்து பேசியிருப்பது இதுதான் முதல் முறையாகும்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, வரும் நாட்களில் எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Kashmir Chief Minister meets Prime Minister after the Pahalgam attack