விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜி என்பவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தன்னை எந்த வகையிலும் கொடுமை செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் தரப்பில், மனுதாரருக்கு எதிரான புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்றும், மனுதாரர் தரப்பில், "விசாரணை என்ற பெயரில் மனுதாரரை போலீசார் துன்புறுத்துகின்றனர்" என்றும் தெரிவித்தனர்.

இந்த இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, "ஒரு புகார் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் இருந்தாலும், அது பி.என்.எஸ்.எஸ். சட்டத்துக்கு கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும். அதேசமயம் விசாரணை என்ற பெயரில் நடைபெறும் கொடுமையை கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

ஆகவே, புகார் குறித்து விசாரணைக்கு அழைக்கப்படும் நபர் அல்லது சாட்சி சொல்ல வரும் நபர் என்று யாரை விசாரணைக்கு அழைத்தாலும், பி.என்.எஸ்.எஸ். பிரிவு 179-ன்படி போலீசார் சம்மன் அனுப்பவேண்டும். அப்படி நடைபெறும் விசாரணை குறித்த விவரத்தை பொது டைரி, ஸ்டேஷன் டைரி, வழக்கு டைரி உள்ளிட்ட ஆவணங்களில் குறிப்பிட வேண்டும். விசாரணை என்ற பெயரில் யாரையும் போலீஸ் அதிகாரிகள் கொடுமை செய்யக்கூடாது" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai high court order no torture to investigation peoples


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->