புதிய TVS iQube ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்? பண்டிகை காலத்தில் அதிரடியான அப்டேட்களுடன் வருகிறதா?இந்திய குடும்பங்களுக்கு ஏற்ற ஸ்கூட்டர்!
New TVS iQube scooter to be launched soon Coming with exciting updates for the festive season A scooter perfect for Indian families
TVS நிறுவனம் தனது பிரபல மின்சார ஸ்கூட்டர் iQube-இன் புதிய பதிப்பை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025-ஆம் ஆண்டின் பண்டிகை காலத்தில் இந்தியாவில் இந்த புதிய மாடல் அறிமுகமாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது ஒரு சிறிய மேம்பாடு அல்ல; முக்கியமான தொழில்நுட்ப மேம்பாடுகளும், புதிய வடிவமைப்பும், கூடுதல் வகைகளும் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது TVS நிறுவனம் iQube-இன் ஐந்து மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஏப்ரல் 2025 விற்பனை கணக்குகளின்படி, iQube மின்சார ஸ்கூட்டர்களில் முன்னணியில் திகழ்கிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மேலும் பல மாறுபாடுகளை அறிமுகப்படுத்துவது TVS-க்கு முக்கியமான நகர்வாக அமையும்.
புதிய iQube, 2024-ஆம் ஆண்டு பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ST மாடலை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம். இந்த மாடல் ஸ்லீக் டிசைன், நீல நிறம் மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளியாகியிருந்தது. புதிய iQube அதன் வடிவமைப்பைத் தொடர வாய்ப்பு உள்ளது.
பவர்டிரெயினில் மாற்றங்கள் செய்யப்படலாம். புதிய மாடலில் அதிக திறன் கொண்ட மோட்டார், மேலும் அதிக ரேஞ்ச் (150–160 கிமீ வரை) வழங்கும் பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் வசதிகள் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்சங்களுக்குப் போனால், மேம்பட்ட TFT டிஸ்ப்ளே, Bluetooth, SmartXonnect, Turn-by-turn Navigation, Voice Assistant, Geo-fencing, Regenerative Braking, Anti-theft System என பல வசதிகள் இந்த மாடலில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய மாடல், Ola S1 Pro, Ather 450X, Bajaj Chetak, மற்றும் வரவிருக்கும் Honda Activa Electric போன்ற மாடல்களுடன் நேரடி போட்டியில் ஈடுபடும். புதிய வேரியண்ட்கள் விலை மற்றும் அம்சங்களில் பரந்த தேர்வுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவவில்லை. இருப்பினும், TVS நிறுவனத்தின் இயக்கத்திலிருந்து, புதிய iQube மாடல் மின்சார வாகன சந்தையில் முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
New TVS iQube scooter to be launched soon Coming with exciting updates for the festive season A scooter perfect for Indian families