பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த CRPF வீரர் - மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை.!!
crpf soldier dismiss for married pakisthan women
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி முனீர் அகமது, பாகிஸ்தானை சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணை வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்தத் திருமணத்தை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு தெரியாமல் மறைத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது குறித்து பேசிய CRPF செய்தித் தொடர்பாளர் டிஐஜி தினகரன் தெரிவித்துள்ளதாவது:- "பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை முனீர் அகமது மறைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், விசா காலத்தை மீறி அந்தப் பெண்ணை இந்தியாவில் தங்க வைத்துள்ளார். இதற்காக முனீர் அகமது உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
English Summary
crpf soldier dismiss for married pakisthan women